Perambalur: Work begins on setting up a diesel bunker at the Kunnam Government Bus Depot!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிமிடெட் ) திருச்சி மண்டலம் குன்னம் கிளையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை மேலாளர் சிவசங்கரன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டனர்.

குன்னம் கிளையில் ரூ.1,29,000 மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மற்றும் ரூ.3,75,000 மதிப்பில் பேருந்து பராமரிப்பு பணி பார்க்க புதிதாக அமைக்கப்பட்ட கிரீஸ் பிட்டையும் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!