Perambalur: Workers protest against privatisation of the Electricity Board!
மின் நிறுவனங்களை தனியாருக்கு விடுவதை எதிர்த்து போராடி வரும் சண்டிகர் மற்றும் உத்திரபிரதேச மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவாக, மக்களுக்கான சேவை தொடர்ந்திட மின்சார வாரியங்களை பொது துறையாக பாதுகாத்திட இன்று பெரம்பலூரில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அனைத்து தொழிற்சங்கம் கூட்டுத் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு CITU சார்பாக எஸ். அகஸ்டின், திருச்சி மண்டல செயலாளர், AESU தொழிற்சங்கத்தின் சார்பாக திருச்சி மண்டலச் செயலாளர் பெரியசாமி, ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷன் சார்பாக ராமகிருஷ்ணன், எம்பிளாய்யிஸ் ஃபெடரேஷன் சார்பாக கனி, பொறியாளர் கழகம் சார்பாக மேகலா, பரமேஸ்வரி, அருள்ஜோதி, வெங்கடேஷ் வட்ட செயலாளர், பொறியாளர் சங்கத்தின் சார்பாக ருத்ராபதி வட்ட செயலாளர், ராஜேந்திரன் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் சார்பாக சின்னச்சாமி வட்ட செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.