Perambalur: World Breastfeeding Week Celebration at Government Hospital!
பெரம்பலூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு மற்றும் தந்தை ரோவர் செவியர் கல்லூரி பொறுப்பாளர்கள் இணைந்து உலக தாய்ப்பால் வாரவிழாவை நடத்தினர்.
ஊட்டச்சத்து ஆலோசகர் ஜுலி, வரவேற்றார். மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநருமான மாரிமுத்து தலைமை வகித்து சிறப்புரை வழங்கினார். டாக்டர்கள் கலா முன்னிலை வகித்தார். இருக்கை மருத்துவர். சரவணன் குழந்தைகள் பிரிவு டாக்டர்கள் அருண்குமார், கமலகண்ணன், அருண் பிரசன்னா மற்றும் செவிலியர்கள் தாய்மார்களுக்கு தாய்பாலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர்.
தாய்ப்பால் மகத்துவம் குறித்து கலை நிகழ்ச்சிகள், வினாவிடை போட்டிகள் நடத்தப்பட்டது. செவிலியர் அமலா நன்றி கூறினார்.