Perambalur: Write government competitive exams and get employment: Arun Nehru MP speech!
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.பி., அருண்நேரு மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்ட பின்னர் அவர் பேசியதாவது:
பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெறலாம் என தெரிவித்தார். பின்னர் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். திருச்சி கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரதாப் குமார், காசநோய் துணை இயக்குனர் மருத்துவர் நெடுஞ்செழியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், ஸ்ரீரங்கம் அஞ்சலக கோட்ட கண் காணிப்பாளர் பழனிசாமி , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ , கிராம சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி ஆகியோர் அவர்களது துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.
நிகழ்ச்சியில் அஞ்சல் துறை மூலம் தேசிய கொடி வழங்கல் மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகள் வெளியிடப்பட்டது. இதில் பெண் குழந்தையை காப்போம் பெண்குழந்தைக்கு கற்பிப்போம், மாத்ரு வந்தனா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சுகாதார துறை, அஞ்சல்துறை, காசநோய்பிரிவு, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், முன்னோடி வங்கி போன்ற துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த கண்காட்சி இடம் பெற்றிருந்தது. கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நகராட்சி தலைவர் அம்பிகாராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் கிருஷ்ணமூர்த்தி, மீனாஅண்ணாதுரை, ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர், பொறியாளர் பரமேஷ்குமார், வக்கீல் ராஜேந்திரன், டாக்டர் வல்லபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சாவூர் கள விளம்பர உதவியாளர்கள் ரவீந்திரன் வரவேற்றார். திருச்சி கள விளம்பர உதவியாளர் அருண்குமார் நன்றி கூறினார்.