Perambalur: Young girl committed suicide by setting herself on fire! Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மகள் சங்கவி (வயது 22). நர்சிங் படித்து அவர், வீட்டில் தையல் வேலை செய்து வந்துள்ளார். இன்று இவரது பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டுக்குள் தனியாக இருந்த சங்கவி திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் வேதனை தாங்கமுடியாமல் சங்கவி அலறி துடிதுடித்து சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சங்கவியை பரிசோதித்தனார். அப்போது சங்கவி ஏற்கனவே பரிதாபமாக இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.