Perambalur: Youth arrested for damaging Ambedkar statue; Arumbavoor police action!
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட வெங்கலம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதாக கிராம மக்கள் கூறியதன் அடிப்படையில் வெங்கலம் கிராம வி.ஏ.ஓ அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் கிரிதாஸ் என்பது தெரியவந்தது, இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.