Perambalur: Youth found dead by hanging; Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில், மெயின் ரோட்டில், முருகன் நகர் மேற்கு பகுதியில் வசித்து வந்த மூக்கம்-அமிர்தம் தம்பதியரின் ஒரே மகன் சிவக்குமார்(27). கிரஷர் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இவரது உயிரிழப்பிற்கான காரணம் என்ன என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் ஒருவர் திறந்த வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.