Peramlur: Drunk dispute: The Extramarital affair woman son attacked him with a stick, killing the Extramarital affair man!

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43) கொத்தனார் வேலை பார்த்து வந்தார். திரும ணமாகாத இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி ஜெயந்தி (49) என்பவருக்கும் இடையே, 17 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப்.26 அன்று குடிபோதையில் இருந்த செல்வகுமார், ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட் டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜெயந்தியின் மகன் பாலமுருகன் (22) என்பவர், செல்வகுமாரின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்படடதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, செல்வகுமாரின் தம்பி சுரேஷ் கொடுத்த புகாரில், மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் பாலமுருகனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!