Performed on Hindu leaders and murder, and in Perambalur protest the attack on the BJP protest demonstration
bjp-perambalur

தமிழகம் முழுவதும், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும், அலுவலகங்களின் மீதும் தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்று பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் 10 பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பா.ஜ.க நிர்வாகிகள் உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

சம்பவ இடத்திலேயே டி.எஸ்பி. கார்த்திக் தலைமையிலான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர்.

இதில், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன், கட்சி பிற பொறுப்பாளர்கள் சந்திரசேகர், இளங்கோவன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சுமூகமாக நடக்க இருந்த போராட்டத்தை, டி.எஸ்பி. கார்த்திக்கிற்கு போதிய அனுபவம் இல்லாத காரணத்தினால், போராட்டம் நடத்தாமல் அமைதியாக கடையில், டீ குடித்து கொண்டு இருந்த பா.ஜ.க வினரை போராட்டம் நடத்தவிடாமல் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய போலீசாருக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தார்.

அது வரை நல்ல ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருந்த பா.ஜ.க,வினர் சற்று சுதாகரித்து கொண்டு நாங்கள் போராட்டம் நடத்த வரவில்லை, டீ குடிக்க வந்தோம், உள்ளாட்சி மனு தாக்கல் மற்றும் தேர்தல் பணிகளை கவனிக்க செல்கிறோம் என அருகில் இருந்த கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டனர்.

இதனால், பேருந்து நிலையத்தில் டி.எஸ்.பி. கார்த்திக் கடுப்புடன் நின்று கொண்டு இருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்த முன்வரவில்லை.

போலீசாரோ தேர்தல் நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே , சுமூகமாக முடிய வேண்டிய கொஞ்ச நேர ஆர்ப்பாட்டத்திற்கு பேருந்து நிலையத்திலேயே வெகு நேரம் காக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோமே என வெளியே சொல்ல முடியாமல் மனுதுக்குள்ளே நொந்து கொண்டனர். பின்னர், மற்ற போலீசார் பேசியதால் பா.ஜ.க, கட்சியினர் போராட்டம் செய்து கைதாகினர்.

இதனால், ஒரு மணி நேரம் புதிய பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!