PMK founder Dr.Ramadoss congratulates to DMK leader Stalin and Treasurer Duraimurugan!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :
திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் சென்னையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவுக்குள் இருவரின் பணிகளையும், உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞரணி அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட வகித்து இப்போது தலைவராக ஸ்டாலின் உயர்ந்திருக்கிறார்.
அதேபோல், துரைமுருகனும் மாணவரணி செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறமையை மெய்ப்பித்து விட்டு பொருளாளர் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்றுக் கொண்ட புதிய பதவிகளில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் முத்திரை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், என தெரவித்துள்ளார்.