Poor people do not need to worry as there is no facility to conduct cases: Perambalur Principal District Session Judge Information

தேசிய சட்டப்பணிகள் தினவிழாவினை முன்னிட்டு தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் தினவிழா நடைபெற்றது.

விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எஸ்.பாலராஜமாணிக்கம், பொதுமக்களுக்கு வீடு வீடாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நோக்கங்கள், செயல்பாடுகள் சென்றடையும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றிய அவர் பேசியதாவது:

அடித்தட்டைச் சேர்ந்த பாமரமக்களும் சட்ட உதவி பெறலாம், அதற்கு எந்நெரமும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களுக்கு உதவ காத்திருக்கிறது எனவே, ஏழை – எளிய மக்கள் தங்களுக்கு பொருளாதார வசதி இல்லையே எவ்வாறு தங்களது வழக்குகளை நடத்துவது என்று கவலைப்பட வேண்டாம் அவர்கள் எளிய முறையில் தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள சட்டஉதவி முகாம்களை அணுகலாம்.

அதன் முதற்கட்டமாக 09.11.2018 முதல் 19.11.2018 வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வழக்கறிஞர்கள் குழுமமும், சமூக சட்ட ஆர்வலர்கள் குழுமமும் பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிய இருக்கிறார்கள். எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மகிளா நீதிமன்ற நீதிபதி என்.விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர், ஏ.முரளீதரன், சார்பு நீதிபதி சிரிஜா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எம்.வினோதா மற்றும் நீதித்துறை நடுவர்கள் ஜி.அசோக்பிரசாத் மற்றும் எம்.மோகனப்பிரியா மற்றும் உரிமையியல் நீதிபதி பி.கருப்பசாமி மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகெட் அசொசியெசன் சங்கத் தலைவர் முகமது இலியாஸ், மற்றும் வழக்கறிஞர்கள் சுந்தரராஜன், ராதாகிருஷ்ணமூர்த்தி, ஆர்.மணிவண்ணன், ஜி.பாபு, சந்தானலட்சுமி, வாசுதேவன், துரை, செந்தில்நாதன், மற்றும் அரசு வர்க்கறிஞர்கள் கணேசன், தங்க.பாலமுருகன், மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!