Public demand that the police impose fines on government bus and government drivers who violate rules!! Award should be given to those who capture the film!!

நாளுக்கு நாள் மக்கள் தொகைக்கு பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் பெருக்கமும் அதிகரிகத்து வருகிறது. சாலைகளில் போக்கவரத்து கடந்த 25 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிகத்து வருகிறது. சாலை போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் பொதுவானது என்ற போதிலும், போலீசார் பாராபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலைவிதிகளை பொதுமக்களை விட, பெரும்பாலான அரசு பேருந்து டிரைவர்கள் உரிய பஸ் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை. உரிய நேரத்திற்கு , செல்ல ஊர்களுக்கு சென்றடைவதில்லை. மேலும், பொதுமக்களின் அவசரத்திற்கு நிறுத்தப்படாத பேருந்து டிரைவர், கண்டக்டர் எவராவது, வழியில் தென்பட்டால், குழைந்து குசலம் விசாரிப்பது, தனியார் பஸ்களுடன் டைம் அட்ஜஸ்மெண்ட் செய்து கொண்டு வாகனங்களை இயக்குவது, வளையும் போது, திரும்பும் போதோ உரிய சமிக்கைகளை பயன்படுத்தி எதிர்வரும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.

உயர் அதிகாரிகளின் வண்டி டிரைவர்கள், சீட் பெல்ட் அணிவதில்லை, அதிகாரிகளும் அணிவதில்லை. வாகனங்களை தாறுமாறாக இயக்குவது, முன், பின் வரும் வாகனங்களை கண்டும் காணமல் இயக்குவது, பொதுமக்கள் கேட்டால் அரசு பணியாளை வேலை செய்வதை தடுத்ததாக வழக்கு போடுவது பல்வேறு சட்ட விரோத முறைகளை கையாளுகின்றனர்.

நெல்லையில் போலீசாருக்கும், அரசு பஸ் ஊழியர்களுக்கும் மோதல் நடந்த போது அபராதம் விதித்த போலீசார் அதை கிடப்பில் போட்டுள்ளனர் என்பது குறிபப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!