Public examinations start on March 2, 9270 pupils will writing.

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் 02.03.2017 முதல் 31.03.2017 முடிய 24 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இத்தேர்வில் 4,701 மாணவர்களும், 4,569 மாணவிகளும் ஆக மொத்தம் 9,270 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு மையத்திற்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளராக 32 தலைமையாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 24 தேர்வு மையத்திற்கும் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 32 ஆசிhpயர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

9 வழித்தடங்களில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வுக்கு அறைக் கண்காணிப்பாளராக 546 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இத்தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற 73 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள 692 ஆசிரியர்களுக்கும் தேர்வு பணி நியமன ஆணையினை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் 32 தலைமையாசிரியர்கள், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் 32 ஆசிரியர்கள், வழித்தட அலுவலர்கள் 9 பேருக்கும் மற்றும் அறை கண்காணிப்பாளர் 546 ஆசிரியர்களுக்கும் பறக்கும் படை உறுப்பினர் 73 ஆசிரியர்களுக்கும் 27.02.2017 மற்றும் 28.02.2017 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணித் திட்டம்) தலைமையில் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்ட வழிகாட்டு கையேட்டில் உள்ளவாறு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியினை விளக்கத்துடன் எடுத்துக் கூறி அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

9 வழித்தட அலுவலர்களுடன் ஆயுதம் ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மூலம் செய்யப்பட்டுள்ளது, மேலும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அலைபேசி (கைபேசி)யை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!