PWDs eligible for all types of assistive devices can apply: Perambalur Collector Info.



தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தகுதியுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் பெறாத மாற்றுத்திறனாளிகள் கீழ்க்கண்ட உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள்.

சக்கர நாற்காலிகள் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள் மூன்று சக்கர சைக்கிள்கள் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய செயலிகளுடன் கூடிய கைபேசிகள். கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை மற்றும் நவீன செயற்கை கால்கள்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கு ஊன்றுகோல்கள், கை கடிகாரங்கள் மற்றும் நவீன மடக்கு ஊன்றுகோல்கள்.

செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கான தையல் இயந்திரங்கள்.


எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர். என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 20.07.2024 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04328 – 225474 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!