Rally of Kerala to ban the use and awareness programs have been demanding that the students

world-transplant-rally

பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்களை பயன்படுத்த கேராளவை போன்று தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

பெரம்பலூரில் இன்று உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று சுகாதராம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கு சுமார் 9 மணிக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் பதினோரு மணிவரை கால்கடுக்க காத்திருந்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேரணியில் பிடித்து செல்லும் பேரணியில், முதலில் ஆங்கிலத்தில் அசசிடப்பட்ட பேனரில் முதலமைச்சர் படம் இல்லாமலும், பின்னர் இரண்டாவதாக அச்சிடப்பட்ட பேனரில் முதலமைச்சரின் படம், தமிழக அரசின் சின்னம் குறிப்பிட்ட விகிச்சார அளவு இல்லாமல் இருந்ததால் மீண்டும் மூன்றாம் முறை அடுத்த பேனர் அச்சிடும் வரை மாணவர்களை நிற்க வைத்தனர். அதனால் மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் கற்க வேண்டிய மாணவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் நின்று கொண்டே இருந்தனர். இந்த சம்பவங்களுக்கு அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் கேராளவை போன்று பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்களை பயன்படுத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!