Regional-level Kabaddi tournament: Rover cuo : Kallakurichi Govt school won first prize

kabadi

19 வயதிற்கு உட்பட்டோருக்கான மத்திய மண்டல அளவிலான கபடி போட்டி பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

பெரம்பலூரில் உள்ள தனியார் ( ரோவர்) பொறியியல் கல்லூரியில் 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ரோவர் சுழற்க் கோப்பைக்கான ஆடவர் கபடி போட்டி மத்திய மண்டல அளவில், நேற்றும், இன்றும், நடைபெற்றது. அதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.

இறுதிச் சுற்றில் முதல் பரிசை வென்ற விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ரூ.5 ஆயிரம், கேடயமும் , இரண்டாம் இடம் வென்ற திருச்சி பாய்லர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.4 ஆயிரம், கேடயமும், மூன்றாம் பரிசு வென்ற கரூர் வெள்ளியணை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், கேடயமும், நான்காம் பரிசு வென்ற அரியலூர் – இரும்புலிக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், கேடயத்தையும் வள்ளலார் ஜெ.அரவிந்தன் வழங்கினார்.

ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், துணைச் சேர்மன் ஜான் அசோக் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முதல்வர் கணேஷ்பாபு, அல்லிராணி, பேராசிரியர்கள், சுபாராஜ், பெரியசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி இயக்குனர்கள், புகழேந்தி, கண்ணன், வெற்றிவேல், அறிவழகன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். பேராசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு. தங்குமிடம், உணவு, தேனீர், மற்றும் சிற்றுண்டிகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!