Resolution in the Perambalur VCK meeting demanding caste-wise population census!
முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு மாநில செயலாளர் வீரசெங்கோலன், முன்னாள் மண்டல செயலாளர் இரா.கிட்டு, திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஜெ.தங்கதுரை, பெரம்பலூர் நாடாளுமன்ற துணை செயலாளர் சா மன்னர்மன்னன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி. தமிழ்மாணிக்கம், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன்.பாவணன், மண்டல துணை செயலாளர்கள் பெ. லெனின்,இரா ஸ்டாலின், மாநிலச் செயலாளர் சு. ராசித்அலி , மாநிலத் துணை செயலாளர்கள், மா. அண்ணாதுரை, கா. தமிழ்குமரன், மாநில துணை செயலாளர் பேரா முருகையன் , மற்றும் மாவட்ட அமைப்பாளர் பெ.முரசொலி , அய்யாக்கண்ணு க. ஐயம்பெருமாள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய முகாம் செயலாளர்கள் திரளாக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், 35 ஆண்டு கால இடையுறாத உழைப்பாலும், நமது கட்சி மீது கொண்ட வெகு மக்களின் நன்மதிப்பாலும், விசிக கட்சியை தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பற மாநில கட்சியாக உருவாக்கி பானைச் சின்னத்தை நிரந்தர கட்சியின் சின்னமாக்கிய தலைவர் தொல். திருமாவளவனுக்கு நன்றி தெரிவிப்பது,
இந்திய அரசு யாதொரு சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 348க்கு எதிரான நடைமுறையை கையாண்டு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருதலைபட்சமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்றும் பழைய சட்டங்களை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என்றும்,
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தாராளமாக விற்கப்படும் டாஸ்மார்க் சாராயம் மற்றும் கள்ளச் சாராயம் மற்றும் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை திருட்டுத்தனமாக விற்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போதையில் இருந்து பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள், மாணவ, மாணவிகளை மீட்டு நல்வழிப்படுத்தும் நடவடிக்கையை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும்,
எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு செய்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்குட்பட்டு புதிய இட ஒதக்கீட்டை நடைமுறைப்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும்,
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தற்போது விவசாய பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஏரி, குளங்கள், குட்டைகள் மற்றும் வாய்க்கால்கள், வாரிகளை உடனடியாக மராமத்து பணி செய்து மழைநீர் வீணாகாமல் சேமித்து விவசாயத்துக்கு பயன்படும் வகையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்றும்,
2024-2025ம் ஆண்டு மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை பட்ஜெட்டில் ஓரவஞ்சனையாக தமிழகத்தை முற்றிலும் புறக்கணித்துள்ள மோடி அரசின் போக்கை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதாகவும்,
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கொலைக்கான முழு பின்னணியும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்பட்டன.