Rubella vaccine in the collector’s office puts Camp

பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி கடந்த 06.02.2017 முதல் 15.03.2017 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 22,878 குழந்தைகள் உள்ளனர். இதில் 11.03.2017 வரை 12,884 குழந்தைகளுக்க போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ பாதிப்போ ஏற்படாது மிகவும் பாதுகாப்பானது எனவே பெற்றோர்கள் அச்சமின்றி தங்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பெற்றோர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் மரு.சம்பத் தொடக்கி வைத்தார். இம்முகாமின் 353 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசி முகாம் 15.03.2017 வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் நகராட்சிக்குட்பட்ட அரசு நகர் புற சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர்கள் அரவிந்தன், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!