Sanyukta Kisan Morcha Protest for Minimum Support Price Guarantee Act for Agricultural Commodities!
சன்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) சார்பில் பெங்களூரு பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பில் கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி தலைவர்கள் குர்புரு சாந்தகுமார், பஞ்சாப், ஹரியாணாவை சேர்ந்த ஜக்ஜீத் சிங் டல்வால், சுக்ஜித் சிங், பஞ்சாபைச் சேர்ந்த ஹர்சுலிந்தர் சிங், அபிமன்யு கோஹர், லக்விந்தர் சிங் அவுலாக், ஜாபர்கான் தமிழகத்தைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன், கேரளாவைச் சேர்ந்த கே.வி.பிஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சன்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) தலைவர் ஜக்ஜீத் சிங் டல்லேவாலா கூறுகையில், ‘எம்எஸ்பி உத்தரவாதச் சட்டத்திற்காக பிப்ரவரி 13 முதல் 4 இடங்களில் எங்கள் போராட்டம் நடக்கிறது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் 125 நாட்களுக்கு மேலாக சாலைகளில் முகாமிட்டுள்ளனர், மத்திய அரசு நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.
எங்களின் கோரிக்கைகள்: விவசாயி சமூகத்தின் மீதான கோபத்தால் கிராமப்புறங்களில் 2019 தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் பாஜக அரசு 71 லோக்சபா தொகுதிகளை இழந்துள்ளது என்றும், பாஜக தலைமையிலான என்டிஏ அரசு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை மாற்றாவிட்டால், பாஜக விவசாயிகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெரும் நிலையில் போராட்டத்தை தீவிரம் அடையும் என்றார்.
ஜூலை 8 ஆம் தேதி, எஸ்கேஎம் (அரசியல் சாராத) மற்றும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா, பிஜேபியின் 240 எம்.பி.க்கள் தவிர மற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களின் 12 கோரிக்கைகள் குறித்து கேரிக்கை மனு அளிக்கப்படும். ஜூலை மாதத்தில் டெல்லியில் மிகப்பெரிய விவசாயிகள் மாநாட்டை நடத்தும் என்றார். தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் தென்னிந்திய விவசாயிகள் சார்பில் கடந்த ஜூன் 24-ம் தேதி சிவமொக்காவில் பெரிய விவசாயிகள் மாநாடு நடந்து முடிந்துள்ளது என அவர் கூறினார்.
செப்டம்பர் மாதம் ஹரியானாவில் விவசாயிகள் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம், இதில் இந்தியா முழுமையிலிருந்தும் 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்பார்கள். மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியின் விவசாயிகள் விரோத கொள்கைக்கு எதிராக விவசாயிகள் வாக்களித்ததால் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையை மோடி இழந்து விட்டார்.தற்போதையில் தேசிய ஜனநாயக முன்னனி ஆட்சி அமைத்துள்ளது.
NDA ஆட்சியில் பங்கேற்றுள்ள கட்சிகள் விவசாயிகளுக்கு MSP உத்தரவாத சட்டத்தை உருவாக்க அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்கான அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பிஆர்.பாண்டியன் கூறினார். பிப்ரவரியில் மத்திய அரசுடன் நடந்த 4 சுற்றுப் பேச்சுவார்த்தையில் தென்னிந்திய விவசாயிகளுக்கு வலுவான அமைப்புடன் கூடிய நறுமணப் பொருட்கள் வாரியம் அமைத்தல், சி2+50% ஃபார்முலாவின்படி தேங்காய் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை போன்ற பிரச்னைகளை வலுவாக எழுப்பியதாக விவசாயத் தலைவர்கள் மேலும் தெரிவித்தனர். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை. SKM (அரசியல் சாராத) நாடு முழுவதும் விவசாய சமூகத்தினரிடையே ஒற்றுமையை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறது. என தெரிவித்தனர்.