Sathunavu, Anganwadi Employees’ Pensioners’ Union protested by wearing black cloth to demand higher pension!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு, தமிழ்நாடு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வு பெற்றவர்கள் கண்களில், கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு பென்சன் ரூ. 6750-யை அகவிலைப்படியும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பள்ளி காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டது,