School buses with BJP flag in violation of rules for meeting: Transport Minister’s hometown, officials have no power to ask!

இன்று மாலை திருச்சியில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை குறித்த விளக்க பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் இருந்து கூட்டம் சேர்ப்பதற்காக பாஜக தொண்டர்கள், பொதுமக்களை அழைத்து செல்கின்றனர்.

அதற்கு தனியாக பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஆனால், விதிகளை மீறி பாஜகவினர், தனியார் பள்ளிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். பள்ளி பேருந்துகளை பள்ளி பயன்பாட்டிற்கு தவிர வேறு எதற்கு பயன்படுத்த கூடாது என உத்தரவு இருக்கிறது. அது பெரம்பலூர் மாவட்டத்தில் காற்றில் பறக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பேருந்துகள் பாஜக கொடியுடன் திருச்சியை நோக்கி செல்கின்றன. இந்த பகுதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சமூக ஊடகங்களிலும், அரசியல் விமர்சகர்களும், பாஜகவின் B டீம் ஆக திமுக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், அதை நிருபிக்கும் வகையில், போக்குவரத்துறையோ, அல்லது அதை சார்ந்த அதிகாரிகள் யாரும், இதை கேட்க முன்வரவில்லை. மேலும், தமிழக அரசின் கையாளாகத நிலையாக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சின் B. டீமா என்பதை திமுக தலைமையிலான தமிழக அரசு விளக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விதிமீறலை குறித்து மேடையில் பேசுவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆ.ராசா மேடையில் அடிக்கடி தெரிவிக்கும் பழமொழியான யோக்கியன் வரார் சொம்பை எடுத்து உள்ளே வை என்பது ஞாபகத்திற்கு வருகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!