Seizure of 1 ton of gutka near Perambalur: 2 youths from Bangalore arrested!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஆத்தூர் சாலையில், கிருஷ்ணாபுரம் கிராமத்தில், வெண்பாவூர் பிரிவு ரோடு பகுதியில் வாகன தணிக்கையின் போது, பெங்களூரில் இருந்து மகேந்திரா பொலிரோ பிக்கப் வாகனத்தில், பெரம்பலூருக்கு கடத்தி வந்த ஒரு டன் (ஆயிரம் கிலோ) குட்காவை உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையிலான அரும்பாவூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்த பெங்களூரு சிங்கேரி பகுதியை சேர்ந்த பிரவீன்(22), அஸ்லாப்(30), ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்துள்ள போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மகேந்திரா பொலிரோ பிக் அப் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.