Soil theft in lorries with the help of authorities near Perambalur! Captive villagers!

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தில், உரிய அனுமதியின்றி, அதிகாரிகள் துணையுடன் ஏரி மண்ணை அள்ளி ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் – செட்டிகுளம் சாலையில் உள்ள சத்திரமனை கிராமத்தில் உள்ள ஏரியில் வண்டல் மண்ணை கனரக பொக்லைன் இயந்திரம் கொண்டு 5-க்கும் மேற்ப்பட்ட கனரக லாரிகளில் மண் எடுத்துச் செல்வதை கண்ட பொதுமக்கள், இதுகுறித்து ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர், விசாரித்தபோது எவ்வித அனுமதியும் இன்றி லாரிகளில் மண் திருடிச் சென்றது தெரியவந்தது, மேலும் இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பணியாளரிடம் கேட்ட போது கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் தாசில்தாரிடம் கேட்டபோது தாசில்தார் அலுவலகத்திற்கு மண் எடுப்பதாக அவரும் பொய்யான தகவல் கூறியுள்ளார், என்பதை அறிந்த கிராம பொதுமக்கள் ஆவேசமடைந்து, தங்கள் ஊரில் உள்ள ஏரி மண்ணை எடுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து அங்குள்ள வண்டிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்தனர், இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்தாவது:

பெரம்பலூர் துறையூர் சாலை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்காக அனுமதியின்றி அதிகாரிகளின் துணையோடு வாகனங்களில் மண் எடுத்துச் செல்கின்றனர். இதில் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள கணிசமான தொகையை கையூட்டாக பெற்றுக் கொண்டு வாய்மொழி உத்திரவிட்டுள்ளார்.

ஏரியில் இருக்கும் வளமான வண்டல் மண்ணை உள்ளூர் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் அனுமதி கேட்டால், மண் எடுக்க பல்வேறு அனுமதி பெற வேண்டும், அதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், முன்பணம் கட்ட வேண்டும் என்று மக்களை அலைகழித்து மண் எடுக்க விடாமல் தடுக்கும் அதிகாரிகள், இதுபோன்ற தனியார் நிறுவனம் எவ்வித அனுமதியின்றி மண் எடுப்பதற்கு மறைமுகமாக அதிகாரிகள் ஆதரவாக உள்ளனர்.

இது கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறுகிறார்கள் ஆனால் இது முழுக்க முழுக்க அங்கு செல்லவில்லை பொய்யான தகவலை அளிக்கின்றனர், இது சாலை விரிவாக்கப் பணிக்காக எடுத்துச் செல்லப்படுகிறது, நாங்கள் எங்கள் ஊர் மண்ணை எடுக்க விடமாட்டோம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன், இதுபோன்று அனுமதியின்றி ஏரிமண் அள்ளும் சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபபப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வேலி பயிரை மேய்வது போல, அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசுக்கும், மக்களுக்கும் செயல்படுவது ஜனநாயக விரோதமாகும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!