Sounded must the national anthem in Movie theaters: Supreme Court
நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேவேளையில் சுருக்கப்பட்ட தேசிய கீதத்தை இசைக்க தடை விதித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு வார காலத்துக்குள் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாவது, நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும்.அவ்வாறாக திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்கும்போது பொதுமக்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக் கொடியை திரையிட வேண்டும்.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதில் எவ்வித விளம்பர ஆதாயமும் தேடக்கூடாது. தேசிய கீத வரிகளை விரும்பத்தகாத பொருட்களின் மீது அச்சிடக் கூடாது. திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத சினிமா திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது