Special camps for farmers and homeowners to resolve lease issues: Perambalur Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றத்தில் உள்ள நிலுவை மனுக்கள் தீர்வு செய்திடும் பொருட்டு சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற முகாம் மற்றும் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் வட்டத்தில் 01.08.2021 முதல் 31.01.2022 வரையிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் 01.08.2021 முதல் 30.04.2022 வரையிலும், குன்னம் வட்டத்தில் 01.08.2021 முதல் 30.04.2022 வரையிலும், ஆலத்தூர் வட்டத்தில் 01.08.2021 முதல் 30.04.2022 வரையிலும் உள்ள காலங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்து தனிப்பட்டாவிற்காக உட்பிரிவு கட்டணம் செலுத்திய பொதுமக்கள் மற்றும் இ சேவை மையம் மூலமாக உட்பிரிவு செய்து தனி பட்டா கோரி விண்ணப்பித்த மனுதாரர்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாளன்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தனிப்பட்டா பெற்றுக் கொள்ளலாம்.

மேற்படி சிறப்பு முகாமில் நில அளவை (புல) எண்கள், உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார், காப்பாளர் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை குறித்த திருத்தம், மேற்குறிப்பிட்ட சில கலங்கள் பதிவுகளின்றி (வெற்றாக) இருக்கும் இனங்கள், ஒரு பட்டாதாரரின் பரப்பு, பெயர் பக்கத்து நிலத்தின் பட்டாதாரரின் விவரங்களுடன் (ஒன்றின் இடத்தில் மற்றொன்று மாறியிருக்கும் இனங்கள்) குறித்த மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 18.05.2022 மற்றும் 19.05.2022 ஆகிய நாட்களில் பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர்(வ), வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை(வ), குன்னம் வட்டத்தில் வடக்கலூர், ஆலத்தூர் வட்டத்தில் நக்கசேலம் ஆகிய பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!