Speech competition for students on the eve of Kalaignar Karunanidhi’s birthday; Perambalur Collector Information!
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் சூன்-3ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 03-06-2022–வெள்ளிக்கிழமை அன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்குத் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் என வழங்கப்படும்.
போட்டியானது காலை 09.30 மணிக்குத் தொடங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.