Srivilliputtur Cotton Research Center Assistant Agricultural Officer Thrown in Perambalur
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள பாரதிதாசன் நகர் 2-வது தெருவில் வசிக்கும் ஆசிரியர்களான கருணாகரன் – விஜயா தம்பதியினரின் மகன் பிரசன்னகுமார் (வயது 22).
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மைய உதவி வேளாண் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த அவர் தூங்க சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வீட்டில் இருந்தவர்கள் தெரிய வந்தது.
கடந்த 6 மாதமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசன்னகுமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.