Start of integrated primary health care service center perumattur
உலக தரத்திலான ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமத்தூரில் 20 மதிப்பில், உலக தரத்திலான ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது : தமிகத்தில் உள் 8706 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனி கூடுதலாக ஒரு செவிலியர் நியமனம் செய்யப்பட்டு வரும் நாட்களில் ஒவ்வொரு கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு செவிலியர்கள் பணியாற்றுவார்கள், கடைகோடியில் உள்ள அனைத்து தரப்பு கிராம மக்களும் முழு சுகாதாரத்தை எட்ட வேண்டும் என்ற நோக்கில் பரிசார்த்த முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதன் முறையாக இத்திட்டம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திலும், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி ஒன்றியத்திலும் தலா ஒரு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவாக படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, மாநில சுகாதார திட்ட இயக்குனர் தரேஸ் அஹமது, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ம.சந்திரகாசி, குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நந்தக்குமார் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கர்ணன் (ஆலத்தூர்) மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள் அரவிந்தன், சேசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் வந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையை மருத்துவ குழுவனருடன் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நரம்பியல் மருத்துவரை விரைவாக நியமிக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தவர், முன்னதாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை துவக்கி வைத்து அங்கு நடைபெற்று கொண்டிருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!