Start of work on the removal of Prosopis juliflora trees in the big lake arumbavur

பெரம்பலூர்: திமுக பொதுச் செயலாளர் தொடர்ந்த வழக்கின் பேரில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள், பொதுப் பணித் துறைக்கு சொந்தமான நீர்நிலைகள், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டு, பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது.

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் அரசுத்துறைகளும், தன்னார்வ அமைப்புகளும் ஈடுபட்டு பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.

இன்று வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் பெரிய ஏரியில் உள்ளூர் விக்டரி லயன்ஸ் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சீமைக்கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு அகற்றும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ப.வேலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்சியில் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!