Students are more likely to visit the Tamil Nadu government Schools: Minister Pandiarajan

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரித்து உள்ளது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்

பெரம்பலூர் அரசு பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
பாண்டியராஜன், அங்கு செயல்படுத்தப்பட்ட பயோ-மெட்ரிக் (விரல் ரேகை மூலம்) வருகை பதிவேடு முறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு முன்னாள் கலெக்டர் தரேஸ் அஹமது துவக்கி வைத்த திட்டமான சூப்பர்-30 (Thirty) என்ற திட்டத்தையும் ஆய்வு செய்த அவர் மேலும், அங்குள்ள பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். பின்னர், 8 வகையான படைப்பு கலைத்திறன்களான ஓவியப்போட்டி, களிமண்ணால் பொம்மைகள் செய்வது, சுடுமண் சிற்பங்கள் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவர்கள் செய்வதை பார்வையிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது : பரிசார்த்த முறையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பையோ மெட்ரிக் சிஸ்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் நிறைகுறைகள் கண்டறிப்பட்டு விரைவில் தமிழகம் முழுவதும், விரைவில் அமல்படுத்தப்படும் என்றும்,

விரைவில் தமிழகம் முழுவதும் 778 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்ட உள்ளதாகவும், மாணவர்களின் பன்முக திறமையை கொண்டு வரும் வகையில் முப்பரிமாண செயல் முறைகள் பாட வகுப்புகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், தமிழக அளவில் பள்ளிகளில் கழிவரை, விளையாட்டு மைதானம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த படுவதோடு, ஆசிரியர்களுக்கும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும்,

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரிகத்து உள்ளது தெரிவித்தார். அப்போது பெரம்பலூர் எம்.எல்.ஏ., இரா.தமிழ்ச்செல்வன், மற்றும் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து பலர் கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!