Students intimidate teachers who give advice: Police take advice class on complaint!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 180க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் படித்து வருகின்றனர்.

அப்பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியரும், 6 ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஒன்பதாம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள் தங்களது கைகளில், பேனாவால் சக பள்ளி மாணவிகளின் பெயரை எழுதி இருந்ததை பார்த்த ஆசிரியைகள் இதுபோன்ற ஒழுங்கீன மற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கண்டித்ததோடு, தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவர்களில் ஒரு மாணவன் அந்த ஆசிரியையை தகாத வார்த்தையால் திட்டியதோடு, எனது பெற்றோர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களை பள்ளிக்கு அழைத்து வந்தால் நடப்பதே வேறு, உங்களையெல்லாம் அடித்து தொலைத்து விடுவார்கள் என மிரட்டல் விடுத்ததுள்ளார்.

இதன் காரணமாக அச்சமடைந்த தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியைகள் 6 பேரும், அருகில் உள்ள காவல் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எழுத்து பூர்வமாக புகார் ஒன்றை கொடுத்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அவர்கள் சிறுவர்கள் அவர்கள் பேசியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க இயலாது ஆனால் உங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும், இதனைப் பெரிது படுத்தாதீர்கள் என ஆலோசனை திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் மிரட்டல் விடுத்த மாணவர்களுக்கு, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கவுன்சிலிங் வழங்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாதா, பிதா, குரு என்று மதித்த காலம் போய் தற்போது, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பயந்து நடக்க வேண்டிய காலமாகிவிட்டது. இது சமூகம் வேறொரு மாற்றத்திற்கான அறிகுறியாகும்.

தமிழகத்தில், பள்ளியில் கத்தி எடுத்துவந்து ஆசிரியரை குத்திய சம்பங்களும் கடந்த காலங்களில்அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் குச்சியால் திருந்தவில்லை என்றால் வருங்காலங்களில் போலீசார் லத்தியால் திருத்த வேண்டிய நிலைய ஏற்படும் என்பதில் எந்த சந்தேககமுமில்லை.

ஆசிரியர் பணி அறப்பணி என்பது வருங்காலங்களில் ஆசிரியர் பணி அச்சத்துடன் கூடிய பணியாகி விடக் கூடாது. பெற்றொர்கள் தங்களது குழந்கைகளுக்கு ஆசிரியர்கள் மீது, மீது நம்பிக்கையும், மரியாதையையும் ஏற்படுத்த வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!