Subsidized chicken chicks for destitute, poor, widows, differently-abled women: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 2024-2025 – ஆம் ஆண்டில் ”ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த மற்றும் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 400 பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம்) 50% மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்டுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப்பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி சொந்த செலவில் ரூ.3,200/- கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்கவேண்டும். சுய சான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50% மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு / ஆடு / செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30% பேர் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் இணைக்கப்பட வேண்டும்.

 இத்திட்டத்தில் பயனடைய விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள பயனாளிகள் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களில் உரிய விபரங்களுடன் விண்ணப்பித்து  பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சசாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்..

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!