Surasamharam in Perambalur: Murugan hunted the monster and destroyed Suran!
பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் 47ஆம் ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் முருகன் வள்ளி தெய்வானை உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிகளுக்கு காலை சிறப்பு அபிஷேகம் முடித்து இரவு 8:00 மணி அளவில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.
செக்கடி தெரு, வ.உ.சி.தெரு, பெரிய தெற்கு தெரு,ஐயப்பன் கோவில்தெரு, ஆகிய தெருக்களில் யானை முகம் பூத முகம் மற்றும் சூரமுகம் கொண்ட அசுரனை வேட்டையாடி, சூரனை அழித்து கடைவீதி வழியாக சிவன் கோயில் சென்றடைந்தார். விழா உபயதாரர்களாக, பெரம்பலூர் நகர நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் விஸ்வகர்மா சங்கத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலர்
தெ.பெ.வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.