Swimming pool, gym comes back into use; Perambalur Collector Information!

model

பெரம்பலூரில் உள்ள அரசுக்கு சொந்தமான, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல்குளம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் கொரோனா காலத்தில் பொது ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது.

25.05.2022 அன்று முதல் நீச்சல் கற்றுக்கொள்வதற்கு பயிற்ச்சி (Learn to Swim Course) ஏப்ரல்-2022 முதல் ஜுன்-2022 வரை நடத்துவதற்கான கட்டணம் ரூ.1000 உடன் 18% ஜிஎஸ்டி, சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர் / வீராங்கணைகளுக்கு இலவச பயிற்சியும், தேசிய அளவில் பதக்கம் பெற்றவர்களுக்கு ஓர் ஆண்டிற்கு ரூ.1000 உடன் 18% ஜிஎஸ்டி, மாநில அளவில் பதக்கம் பெற்றவர்களுக்கு ஓர் ஆண்டிற்கு ரூ.1600 உடன் 18% ஜிஎஸ்டி, மற்றும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.2000 உடன் 18 % ஜிஎஸ்டி , பொதுமக்கள் பயன்படும் வகையில் நாள் ஒன்றிற்க்கு(ஒரு மணி நேரம்) ரூ.50 உடன் 18% ஜிஎஸ்டி, மாதத்திற்கு ரூ.600 உடன் 18% ஜிஎஸ்டி, காலாண்டுக்கு ரூ.1200 உடன் 18% ஜிஎஸ்டி, அரையாண்டுக்கு ரூ.1800 உடன் 18% ஜிஎஸ்டி, ஆண்டிற்கு ரூ.3000 உடன் 18% ஜிஎஸ்டி, மற்றும் உடற்பயிற்சிக்கூடம் மிகவும் குறைந்த கட்டண சலுகையுடன் மாதம் ரூ.300 உடன் 18% ஜிஎஸ்டி, கட்டணத்துடன் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்,

மேலும் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆகும். கட்டணம் செலுத்தும் முறை டிஜிட்டல் (Debit Card, Credit Card & UPI) முறையில் வசூலிக்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!