Tamil Nadu Government Tourism Awards : Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத்துறையால், சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில் முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்தாண்டும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம் உள்ளிட்ட 17 வகைப்பிரிவுகளின் கீழ் 48 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தற்போது 2023-2024 ஆம் ஆண்டின் சுற்றுலா விருதிற்க்கான விண்ணப்பங்கள் www.tntourismaward.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 20.08.2024-க்குள் தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும்.
சுற்றுலா தொழில் முனைவோர்களில் 2023-2024-ஆம் ஆண்டிற்க்கான தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகின்ற 27.09.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள உலக சுற்றுலா தினவிழாவில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது. அதற்கான இடம் நேரம் மற்றும் ஏனைய விவரங்கள் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு பின்னர் தெரியப்படுத்தப்படும்.
எனவே பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் அனைவரும் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை விரைந்து இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு, அதில் தெரிவித்துள்ளார்