TASMAC shop opened to the public in the area to protest the siege

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை காலி செய்யக் கோரி பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ஒட்டியே மேற்குப்பகுதியில் திருநகர் உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்த டாஸ்மாக் மதுபான இன்று திடீரென கடை பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திறக்கப்பட்டது. இதனால் அங்கு குடிமகன்கள் பார் இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் மதுபான பாட்டில்களை குழந்தைகள், பெண்கள் கண் முன்பே குடிப்பதும், பாட்டில்களை தூக்கி எறிவதும், போதை தலைக்கு ஏறிய உடன் கத்தி சத்தம் போடுவது மட்டுல்லாமல், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் கத்தி கலாட்டா செய்கின்றனர். முதல் நாளே இந்த தொந்தரவா என நினைத்த மக்கள் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒன்று திரண்டு அங்கிருந்த கடையை அகற்றக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பயந்து போன மதுபானக் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கோட்டாசியர், வட்டாசியர், மற்றும் காவல் துறையினருக்கு தெரிவித்த பேரில் நாளை காலை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கால அவகாசம் கோரியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். நாளை மீறியும் டாஸ்மாக் மதுபானக் கடை திறந்தால் கடை சூறையாடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!