TET Exam : In Perambalur district, the first sheet was written by 2,818 || ஆசிரியர் தகுதித் தேர்வு : பெரம்பலூர் மாவட்டத்தில், முதல் தாளை 2,818 பேர்கள் எழுதினர்

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 7 தேர்வு மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளை 2,818 பேர்கள் தேர்வு எழுதினர். மேலும், இன்றைய தேர்விற்கு 95 நபர்கள் வருகை தரவில்லை.

முதல் தாள் தேர்வு நடைபெற்ற இன்று தேர்வுப் பணிக்கென 7 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 7 துறை அலுவலர்கள் மற்றும் 9 கூடுதல் துறை அலுவலர்களும், 153 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.

தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் ஒவ்வொரு மையத்திலும் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருந்து தேர்வுகளை சிறப்பாக நடத்தினர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!