Thali Rs .111 crore in the project to the gold scam: CBI to probe the insistence of Stalin

mkstalin
தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக அரசு கஜானாவிலிருந்து 111 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை இப்படி அலட்சியமாக வாரி இறைத்ததின் பின்னனி என்ன? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: “தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தி, அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்ய திட்டம் கூட முறையாக செயல்படுத்தப் படவில்லை என்பதை எடுத்து காட்டுகிறது.

18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள தாலிக்கு தங்கம் கொள்முதலில், ஒவ்வொரு முறையும் சர்வதேச மதிப்பை விட அதிக விலை கொடுத்தே வாங்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அத்தனை விவரங்களும் “தகவல் உரிமை விவரச் சட்டப்படி” பெறப்பட்டிருக்கிறது என்பது “தாலிக்கு தங்கம்” வாங்குவதில் அரசு பணம் 111 கோடி ரூபாய் எப்படி ஊதாரித்தனமாக செலவிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தி யுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 2.1.2012 அன்று ஒரு வங்கியிடமிருந்து 30 ஆயிரம் தங்க நாணயங்கள் வாங்கப்பட்டுள்ளன. 4 கிராம் தங்க நாணயம் ரூபாய் 11 ஆயிரத்து 97 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் 4 கிராம் தங்க நாணயத்தின் சர்வதேச விலை வெறும் 8 ஆயிரத்து 624 ரூபாய் தான். அதேபோல, 27.11.2013 அன்று ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கொடுக்கப்பட்டுள்ள விலை, 4 கிராம் தங்க நாணயத்திற்கு ரூபாய் 10 ஆயிரத்து 462. ஆனால் அன்றைய தினம் 4 கிராம் தங்க நாணயத்தின் சர்வதேச மதிப்பு வெறும் 9 ஆயிரத்து 159 ரூபாய் மட்டுமே.

இப்படி அ.தி.மு.க. அரசு 17.5.2011 அன்று அறிவித்த “தாலிக்கு தங்கம்” வழங்கும் திட்டத்திற்கு, கடந்த ஐந்து வருடங்களில் தங்க நாணயங்கள் கொள்முதலில் அதிக விலை கொடுத்து, அரசு பணத்தை அள்ளிக் கொடுத்துள்ள நிகழ்வு, அ.தி.மு.க. அரசின் மிக மோசமான நிதி நிர்வாக நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. ஏழை எளிய பெண்களுக்கு “தங்க நாணயம்” வழங்கும் திட்டத்தில் கூட அ.தி.மு.க. அரசு செய்துள்ள முறை கேடு, “மாங்கல்யம்” வாங்கு வதிலும் அ.தி.மு.க. ஆட்சியில் “மார்ஜினா” என்ற சந்தேகத்திற்கு இடம் அளித் திருக்கிறது. அரசு கஜானா விலிருந்து 111 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை இப்படி அலட்சியமாக வாரி இறைத்ததின் பின்னனி என்ன?

தங்க நாணயம் கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள விதிமுறை மீறல்கள், சர்வதேச விலையை விட அதிக விலை கொடுத்து அரசுக்கு 111 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தியது உள்ளிட்ட அனைத்து முறை கேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!