The anti-corruption police raided the municipal commissioner’s house in Perambalur!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி., நந்தகோபால் தலைமையில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது, நகராட்சி வளாகத்திற்குள் தூக்கி வீசப்பட்ட 8000 ரூபாய் ரொக்க பணம், நகராட்சி ஆணையர் குமரனின், கார் டிரைவர் இடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்க பணம், உதவி பொறியாளரிடமிருந்து 84,000 ரொக்கப்பணம் மற்றும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து 66,000 ரொக்க பணம் என மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரனின் சொந்த ஊரான பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம்- நான்கு ரோடு செல்லும் சாலையில் கார்த்திக் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள அவரது வீட்டில், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், டிஎஸ்பி., ஹேமச்சித்ரா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை 04.30 மணியிலிருந்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.