The complaint asked for kickbacks at the bar: the police, including female SI Change

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் காவல் நிலைய போலீசார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காவல் நிலையத்தில் எஸ்.ஐ. தவமணி, ஏட்டு பாலு, ராஜேந்திரன், இளவரசன் உள்பட போலீசார் பணியாற்றி வந்தனர். இவர்களை அனைவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் மாற்றப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் கடை கை.களத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டு வருகிறது . இந்த கடையில் உள்ள பாரில் கை.களத்தூர் காவல்நிலைய போலீசார் மாமூல் பெற்று வந்துள்ளனர். திடீரென மாமூல் அதிகமாக போலீசார் கேட்டுள்ளனர். அதன்படி பார் நடத்துபவர்கள் கொடுத்துள்ளனர். இருப்பினும் சில வழக்குகளை பதிவு செய்தார்களாம். போலீசார் அதிகம் மாமூல் கேட்டு மிரட்டிய ஆதாரங்களுடன் மாவட்ட எஸ்.பி.க்கு புகார் போனதால் இந்த நடவடிக்கை என சில போலீசார் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த 29 ம்தேதி இந்த பகுதிக்கு வந்தபோது அவரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் கூடியுள்ளனர். அப்போது பொதுமக்களை போலீசார் கட்டுப்படுத்தவில்லை. இதில் அமைச்சரின் கார் என நினைத்த மக்கள், கலெக்டரின் காரை மறித்து அவர்தான் அமைச்சர் என நினைத்து மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தும், அரசுக்கு எதிரான முழுக்கங்களையும் எழுப்பியதால் கலெக்டர் கோபமடைந்து, மாவட்ட காவல்துறையை கண்டித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், எஸ்.ஐ தவமணி பொதுமக்களிடம் நடந்த கொள்ளும் அணுமுறையும சரியில்லை என்றும் கூறப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!