The country’s economic growth will decline 1 percent Union Budget: G.Ramakirshnan

மத்திய பட்ஜெட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் குறையும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த பிப்ரவரி 7ம் தேதிந நடக்கும் மறியல் போரட்டத்தை விளக்கி பேசும் கூட்டத்திற்கு வருகை தந்த ராமக்கிருஷ்ணன், செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தாவது:

மத்திய பட்ஜெட்டை பொருத்தவரையில், பட்ஜெட்டுக்கு முதல் நாள் சமர்ப்பித்த அந்த ஆய்வறிக்கையில், பணமதிப்பீப்பு நடவடிக்கையினால் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. விவசாயம் பாதித்திருக்கிறது. சிறு, குறு தொழில்கள் பாதித்து இருக்கிறது. அந்த பட்ஜெட்டில வளாச்சியை ஊக்குவிப்பதற்கோ விவசாயத்தை ஊக்குவிப்தற்கோ, வேலைவாய்பை பெருக்குவதற்கோ, எந்த ஆலோசனையும், அந்த பட்ஜெட்டில் இல்லை. மாறாக கலால் வரி என்பது ஒரு லட்சம் கோடி கூடுதலாக விதிப்பதற்கு முடிவெடுத்து இருக்கிறது. அது நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். 20 ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் டாக்சாக சலுகை அளித்து இருக்கிறார்கள்.குறிப்பாக தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போது கிராமப்புற வேலைத் திட்டத்திற்கு கூடுதல் தொகை ஒதுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மறு மதீப்பீட்டு அடிப்படையில் 47 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வேலை உறுதி திடடத்திற்கு செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 48 ஆயிரம் கோடி தான் ஒதுக்கி இருக்கிறது. கூடுதலாக இத்திட்டத்திற்கு 300 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. வறட்சி பாதித்த மாநிலங்களில் கூடுதல் தொகை ஒதுக்கி வறுமையை ஒழிக்க வேண்டும். ரயில்வேயிக்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாக பட்ஜெட் சமர்பிப்பதற்கு பதிலாக பொது பட்ஜெட்டுடன் சேர்த்து 2 , 3 நிமிடங்கிளில் மத்திய நிதி அமைச்சர் முடித்து விட்டார். எதிர் காலத்தில் ரயில்வே துறையினர் அவர்களுக்கு தேவையான நிதி சம்பந்தமாக அவர்களே முடிவெடுக்க எடுக்க வேண்டும் அடிப்படையில் சரக்கு கட்டணமோ, அல்லது பயணிகள் கட்டணமோ, உயர்த்தக்கூடிய அபாயம் உள்ளது என்பது அந்த மத்திய பட்ஜெட்டில் தவறான அணுகுமுறை உள்ளதாக தெரிவித்தார். ஒட்டு மொத்தமாக பட்ஜெட் என்பது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு சாதமாக அமையாமல் மாறாக, கார்ப்பரேட் கம்பனிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காவிரி மன்ற தீர்ப்பின் அடிப்படையிர் நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வேளையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக் கூடாது. மாநில அரசுகள் பேச்சு வார்த்தை அடிப்படையில் தீர்வுகாண வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என்றும், சென்னைக் கடலில் தற்போது எண்ணெய்க் கசிவு என்பது மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கி இருககிறது. மதிப்பீடு செய்வதில கூட மத்திய மாநில அரசுகள் சரீயாக மதீப்பிடு செய்யவில்லை. முதலில் ஒரு டன் என கூறினார்கள், பின்னர் 24 டன் என கூறியுள்ளனர். இந்த பிரச்சனையில் அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். எண்ணெய் கழிவுகளை கடலில் இருந்து அப்புறப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமென தெரிவித்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் அழகர்சாமி, அகஸ்டின், உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!