பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்தவர் து.தாமோதரன், இவர், கடந்த மே. 5 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வட்டாசியர் அலுவலகத்திற்கு வறட்சி நிவாரணம் வரப்பெறாததால் சென்றுள்ளார்.

அங்கு அவரை வெகு நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே வேளையில் யாகம் உள்ளிட்ட பூஜைகள் செய்ததாகவும், அதனை தாமோததரன் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனை வட்டாசியர் பாலகிருஷ்ணன், மற்றும் ஊழியர்கள் அவரை தாக்கி செல்போனை பறித்து படங்களை அழித்ததாகவும், கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், வட்டாசியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் விரோத போக்கை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வரும் மே.12 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே நடத்தப்படுகிறது.
இதில், விசிக, பகுஜன் சமாஜ், திராவிடர் கழகம், மதிமுக, ம.ம.க, திமுக, தமிழக பொதுவுடைமை கட்சி, தமிழக ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அம்பேத்கர் சிந்தைனையாளர் வட்டம், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497