The examination student committed suicide by burning fire
பெரம்பலூர் மவட்டம், அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் இவரது மகள் சாந்தினி (வயது 16) இவர் ஒகளூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினேராம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இறுதி தேர்வான கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இவர் கடந்த சில தினங்களாக மனவருத்தததுடன் இருந்தார். இதுகுறித்து அவரது தந்தை கேட்டு அறிந்துள்ளார். சாந்தினி எதுவும் கூறவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
சாந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையின் நேற்று 11 மணியளவில் இறந்தார். இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.