The fact that the Chennai Metropolitan Police (Third Eye) CCTV Camera Display


சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையைத்தில் பணி புரியும் காவலர் தருமன் தனது தாயின் ஈமச்சடங்கிற்க்கு ஆய்வாளரிடம் விடுப்பு கேட்டு விடுப்பு தரவு மறுத்ததால் wireless மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 21.11.2018 அன்று “எனது தாயின் ஈமச்சடங்கிற்கு ஆய்வாளர் விடுப்பு தர மறுக்கிறார் , நான் என்ன செய்வது “என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறினார். உடன் ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு அவரை உடனடியாக மாற்றி அனுப்புவதாக கூறி ,பின்பு அவரிடம் இருந்து wireless ஐ வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தார்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு wireless மூலம் காவலர் தருமன் தகவல் தகவல் தந்ததால் கோபம் கொண்ட ஆய்வாளர் காவலர் தருமன் அவர் வீட்டிற்கு போகும் வழி பார்த்து காத்துக்கொண்டிருந்தார். தருமன் அவ்வழியே வரும்பொழுது காத்திருந்த ஆய்வாளர் நடுரோட்டில் ஓடி காவலர் தருமனை இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி அவருக்கு கை,கால் மற்றும் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்டு, அவரை தாக்கி. தேனாம்பேட்டை ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது போதையில் உள்ளதாக நிருபித்து உயர்அதிகாரி உதவியுடன் மேல்அதிகாரிடம் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்ய காரணமாக இருந்துள்ளார்.

தற்பொழுது விசாரிக்கையில் காவலர் தருமன் பணிமாற்றிய பின் தனது தாயின் ஈமச்சடங்கிற்கான விடுப்பின் விண்ணப்பத்தை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுக்க செல்கையில் அவரை ஆய்வாளர் இரவிச்சந்திரன் கீழே தள்ளி அவரை ரோந்து வாகனத்தில் ஏற்றிய பின் காவலர் தருமன் தலையில் ஏற்பட்ட காயத்தினால் மயங்கிய நிலையில் ஆய்வாளர் இரண்டு நபர்களின் உதவியுடன் அவருடைய இரண்டு கைகளையும் வலுகட்டாயமாக பிடித்து அவரது வாயில் மதுவை ஊற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மது போதையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளதாக தகவல் தெரிகிறது .

தருமனிடம் இதை பற்றி விசாரித்த பொழுது தனக்கு நடந்தவை என்னவென்று தெரியவில்லை என்றும் ரோந்து வாகனத்தில் ஏற்றிய பின் தலையில் ஏற்பட்ட காயத்தினால் அறை மயக்கத்தில் இருந்த போது தனக்கு மது ஊற்றியதால் மயக்கமடைந்ததாகவும் மயக்கம் தெளிந்த நிலையில் கண் விழித்து பார்த்த போது தான் மருத்துவமனையில் இருந்த்தாகவும் தகவல் தெரிவித்தார். ஆகவே அதிகாரியின் பலத்துடன், தனது ஆணவத்தாலும் ஆட்டம் போடும் தேனாம்பேட்டை ஆய்வாளர் இரவிச்சந்திரன் மீது இந்த CCTV பதிவின் அடிப்படையில் அவர் கொலை முயற்சிக்கு ஈடான செயல் செய்தது தெரியவந்துள்ளது.ஆகவே இவர் மீது காவல்.

உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது காவல்துறை மற்றும் பொதுமக்களின் கோரிக்கை.இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். இதுமட்டும் அல்லாமல் ஆய்வாளர் இரவிச்சந்திரன் மீது இதற்கு முன் பல் புகார்கள் கொடுத்தும் அவர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தருமன் மது அருந்தி இருந்தாரோ இல்லையோ ஆனால் ஒரு காவல் துறை ஆய்வாளர் நடுரோட்டில் இப்படி வழி மறித்து மடக்கி பிடித்து இருக்ககூடாது! அந்த காவலர் அடிபட்டு இறந்து இருந்தால்……?

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!