The hunger strike to demand the right to in Perambalur the real estate industry suffers

ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படுவதை சரிசெய்யக்கோரி பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

பொதுமக்கள் தங்களது சேமிப்பை முதலீடு செய்வதற்காக நிலத்தையே முதலில் தேர்ந்தெடுக்கின்றன. இதற்கு முதல் பாதிப்பு 1.4.2012ல் வந்தது. வழிகாட்டி மதிப்பினை அளவுக்கு அதிகமாக அரசு நிர்ணயம் செய்ததால், நடுத்தர மக்களின் மனை மற்றும் வீடு கட்டும் எண்ணத் தில் பெரும் இடி விழுந்தது. இதனால் அரசிற்கு வெகுவாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதை, சரி செய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே மனைகளாக பிரிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட மனைகளையும், வீடுகளையும், அங்கீகாரமில்லாத வீட்டுமனை வீடுகளையும் பதிவு செய்வதற்கான வரைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,

மேலும், ‘‘ரியல் எஸ்டேட் தொழில் மட்டுமல்லாது, இதனை சார்ந்த பல்வேறு தொழில்களும் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல், ஜல்லி, இரும்பு, பெயின்ட் உள்ளிட்ட கட்டுமான தொழிலும் சரிவை சந்தித்துள்ளது.

முடங்கியுள்ள ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி இருந்த ஏராளமான ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், ஊழியர்கள், தரகர்கள், பத்திரம் எழுதுவோர்கள், கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே இதனை சரி செய்யும் விதத்தில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த வேண்டி பெரம்பலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜேந்தின், சரவணசாமி, முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!