The JACTO GEO Federation had a wait for the Demands at the Perambalur Collectorate office
பெரம்பலூர் : புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு ஊதியக்குழு அறி;க்கையை உடனடியாக வெளியிட வேண்டும்,
ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தும் வரை 1.1.2016 முதல் 20சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைப்பாளர்கள் கி.ஆளவந்தார், கணேசன், அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொருப்பாளர்கள் ஊரக வளர்ச்சித்துறை தயாளன், வருவாய்த்துறை குமரிஆனந்தன், நெடுஞ்சாலைத்துறை மகேந்திரன், சத்துணவு ஊழியர் சங்கம் பெரியசாமி சாலைப் பணியாளர்கள் சங்கம் சுப்ரமணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.