The Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme to provide work to the public demand roadblock
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு, தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்கு அனுக்கூர் கிராமத்தை சேர்ந்த பயனாளிகளை 2 பிரிவுகளாக பிரித்து ஒரு நாளைக்கு ஒரு பிரிவு பயனாளிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வேலை வழங்கப்படாமல் இருந்த பயனாளிகள் தினசரி அனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என கூறி அனுக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வேப்பந்தட்டை-வாலிகண்டபுரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா மற்றும் மங்களமேடு போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் அனைவருக்கும் ஒரே சமயத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.