The money lenders are required to obtain the proper license In Perambalur district – District Administration

rupees-count பெரம்பலூர் மாவட்டத்தில், வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் முறையான உரிமம் பெறவேண்டும், அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதல் வட்டி வசூல் செய்யும் நோக்குடன் வட்டித் தொழில் செய்யும் நபர்கள் மீது பொதுமக்கள் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் முறையான உரிமம் பெறாமல் வட்டித்தொழில் செய்தல் மற்றும் தமிழ்நாடு வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் சட்டத்தின் படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை விட அதிகப்படியான வட்டி வசூல் செய்தல் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மிகையான வட்டி வசூல் செய்யும் நோக்குடன் வட்டித் தொழில் செய்யும் நபர்கள் மீது பொதுமக்கள் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம்.

அதாவது நாள்வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி அல்லது தண்டல் மற்றும் மணிகணக்கு வட்டி போன்ற வகையில் பொதுமக்களிடம் வட்டி வசூல் செய்யும் நபர்கள் மீது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடைச் சட்டம் 2003 (Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Act, 2003)-ன்கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!