The officials of the Central Committee to examine the Perambalur farmers and drought-star hotel with the siege of dry crops

வறட்சியை பார்வையிட வந்த மத்திய குழு முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடமல் போகும் வழியில் கண்துடைப்பிற்காக பார்வையிட வந்ததாக கூறி விவசாயிகள் காய்ந்த பயிர்களுடன் அதிகாரிகள் இருந்த நட்சத்திர ஓட்டலில் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியை பார்வையிட மத்தியக்குழு அதிகாரிகள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து காலை வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் பெரம்பலூர் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக பார்வையிடமால் ஏற்னனவே ஆயத்தமாக தயார்நிலையில் செட் செய்து வைத்துள்ள விவசாயிகளை வைத்து நாடகம் நடத்துவதாக கூறி வயல்களில் காய்ந்த பயிர்களுடன் அதிகாரிகளை காண வந்தனர். அப்போது அரசு அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகளிடம் மழை பெய்யாமல் பொய்த்து போனதால் பிரதமர் காப்பீட்டு திடடப்படி பாதிக்கப்பட்ட பயிர்களான மக்காச்சோளத்திற்கு 17 ஆயிரத்து 500 ரூபாயும், பருத்திக்கு 21 ஆயிரம் ரூபாயும், நெல்லுக்கு 25 ஆயிரம் ரூபாயும், வெங்காயத்திற்கு 28 ஆயிரமும் இழப்பீடு வழங்க கோரியும் மனு கொடுத்து கலைந்து சென்றனர். அதன் பின்னர், பேரளி, ஒதியம், குன்னம் பகுதியில் தயார் நிலையில் இருந்த விவசாயிகளிடம் வறட்சி குறித்து 30 நிமிடத்திலேயே கேட்டறிந்துவிட்டு பின்னர், அரியலூர் மாவட்டத்திற்கு சென்றனர். இந்த ஆய்வின் போது மாவட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பேட்டி:

1. குமாராசாமி -விவசாயி – ஒதியம்

ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயை இழப்பீடு வழங்குதை விட்டு விட்டு உண்மையான நிவாரணம் வழங்க வேண்டும்

2. ஆர்.இராஜாசிதம்பரம், தலைவர், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக பார்வையிடமால் கண்துடைப்பற்காக ஏற்கனவே செட்டப் செய்து வைக்கப்ட்டிருந்த விவசாயிகளிடம் விசாரணை நடத்திவிட்டு உரிய பாதிப்பு அரசு தெரிவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட விவாசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்பட்ட பகுதிகள் ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் சாதமாக அமைந்து விடக்கூடாது. மேலும், அவசர அவசரமாக பார்வையிடுவதை பார்த்தால் மத்திய அரசு ஏற்கனவே ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு கண்துடைப்பிற்காக ஆய்வு நடத்து போல் உள்ளது என தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!