The opening ceremony of the Association of Rural level entrepreneurs – VLE
கிராமப்புற அளவிலான தொழில் முனைவோர் சங்கம் துவக்க விழா
பெரம்பலூரில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களான ஆதார் அட்டைக்கான விபர பதிவுகள், திருத்தங்களுக்கான செய்து ஆதார் அட்டைவழங்குதல், வருவாய் சான்றிதழ்கள், பட்டா, சிட்டா ஆன்லைன் முறையில் பெற்றுதருதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வரும் சேவை மையங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு கிராமப்புற அளவிலான தொழில்முனைவோர் சங்கத்தை (வி.எல்.இ.)ஏற்படுத்தி உள்ளனர்.
இதற்கான, பெரம்பலூர் மாவட்ட அமைப்பு துவக்க விழா நடந்தது. மாநில பொறுப்பாளர்கள் ஜெகநாதன், மணமோகன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்சசியில் மாவட்ட தலைவர் ராஜன், துணைத் தலைவர் நந்தகுமார், செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் ஜெகன், பொருளாளர் அருண்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிராமப்புற மக்களிடத்தில் சேவையை கொண்டு சேர்த்திட குழுவாக செயல்படுவது என்றும், அரசு திட்டங்களின் சேவை வசதிகளை அடித்தள மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவது என்றும்தீர்மானிக்கப்பட்டது. முடிவில் செயலாளர் ராஜா நன்றி கூறினார்.